வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இரு தரப்பினர் மாறி மாறி புகார்
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இரு தரப்பினர் மாறி மாறி புகார்
ADDED : அக் 02, 2024 02:01 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஏனோக் மேன்லின், 41. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த உஷா, 36, என்பவரை திருமணம் செய்துள்ளார்.
டாக்டர் ஒருவர் உஷாவை, ஜாதியை குறிப்பிட்டு பேசியதாக தொடரப்பட்ட வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், புருஷோத்தமன் என்பவரை ஜாதியைக் கூறி பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக, வழக்கறிஞர் ஏனோக் மேன்லின் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, ஏனோக் மேன்லின் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி உஷா, கலெக்டர், எஸ்.பி.,யிடம் மனு அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் சட்டத்துக்கு முரணாக செயல்பட்டு வரும் மத்திய பாகம் போலீசார் மற்றும் துாத்துக்குடி ஏ.எஸ்.பி., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பட்டியலின மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், அவர்களை பாதுகாப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம், தவறான வழியில் பயன்படுத்துவதாக, இதன் வாயிலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

