தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி

டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி

டூ-வீலரில் அமர்ந்திருந்த சிறுவன் தீப்பற்றி பலி


UPDATED : ஏப் 03, 2025 04:45 AM

ADDED : ஏப் 03, 2025 02:10 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 03, 2025 04:45 AM ADDED : ஏப் 03, 2025 02:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மொபட் திடீரென தீப்பற்றி எரிந்ததில் படுகாயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம், உலகம்பட்டியை சேர்ந்தவர் பூஞ்சோலை, 36, இவரது மகன் ராஜிவ், 9, மகள் ரஞ்சிதா, 17. இவர்கள், நேற்று முன்தினம் இரவு பொன்னமராவதியில் இருந்து, உலகம்பட்டிக்கு, டி.வி.எஸ்., சூப்பர் எக்ஸ்.எல்., டூ-வீலரில் சென்றார்.

அப்போது, கேசராபட்டி அருகே எதிர்பாராதவிதமாக மொபட்டின் முன் பக்கம், பெட்ரோல் டேங்க் பகுதியில் தீப்பற்றியது. இதில், டூ-வீலரின் முன் பகுதியில் அமர்ந்து சென்ற சிறுவன் ராஜிவ் பலத்த காயமடைந்தார்.

அதை ஓட்டிச் சென்ற பூஞ்சோலை, இவரது பின்னால் அமர்ந்திருந்த ரஞ்சிதா லேசான காயம் அடைந்தனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, உடன் வலையபட்டி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேல்சிகிச்சைக்காக, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜிவ், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். பொன்னமராவதி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us