உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 16, 2026 10:27 PM
அ நிறம் | அளவு
பள்ளிகொண்டா: பள்ளிகொண்டா அருகே, ‘வாலிபால்’ விளையாட்டை வேடிக்கை பார்த்த சாய் பிரதீஷ், 10, மின்சாரம் பாய்ந்து பலியானார்.
வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா கேம்ரான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹோட்டல் தொழிலாளி வேலன், 32. இவரது மகன் சாய் பிரதீஷ், தனியார் பள்ளியில், 5ம் வகுப்பு படித்தார்.
நேற்று (நவ.,15) இரவு அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர், அங்குள்ள மைதானத்தில் இரும்பு கம்பம் அமைத்து, மின்விளக்குகள் பொருத்தி வாலிபால் விளையாடினர். அதை, சாய் பிரதீஷ் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தபோது, மின்விளக்கு கம்பத்தை கையால் தொட்டதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிகொண்டா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
