தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/திருப்பூரில் பாரில் மது அருந்திய சிறுவர்கள்: விரட்டியடித்த போலீசார்

திருப்பூரில் பாரில் மது அருந்திய சிறுவர்கள்: விரட்டியடித்த போலீசார்

திருப்பூரில் பாரில் மது அருந்திய சிறுவர்கள்: விரட்டியடித்த போலீசார்


UPDATED : ஆக 17, 2015 12:05 AM

ADDED : ஆக 16, 2015 11:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 17, 2015 12:05 AM ADDED : ஆக 16, 2015 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:'டாஸ்மாக்' மதுக்கடை 'பாரில்', மது அருந்திக் கொண்டிருந்த சிறுவர்களை, போலீசார் விரட்டி அடித்தனர்.

திருப்பூர், ஆலங்காடு பகுதியிலுள்ள, 'டாஸ்மாக்' மதுக்கடையில், நேற்று காலை, 15, 17 வயதுடைய சிறுவர்கள் மூவர், மது அருந்த வந்தனர். '21 வயதுக்கு உட்பட்டோருக்கு, மது விற்கக்கூடாது' என்ற விதியை மீறி, அவர்களுக்கு மதுபாட்டில் வழங்கப்பட்டுள்ளது. அங்கேயே மூன்று சிறுவர்களும் மது அருந்தினர்; போதை தலைக்கேற, கீழே விழுந்து புரண்டனர்; வாந்தியும் எடுத்தனர்.தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, அச்சிறுவர்களிடம் விசாரித்தனர். பதில் சொல்ல முடியாத நிலையில் இருந்ததால், அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். பார் மற்றும் கடை ஊழியர்களை எச்சரித்தனர்.

'டாஸ்மாக்' மாவட்ட மேலாளர் முத்து வடிவேல் கூறுகையில், “21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது; சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீதும், அவர்களை மது அருந்த அனுமதித்த, பார் ஊழியர் மற்றும் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us