தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ தி.க., வீரமணிக்கு பிராமண ஸமாஜம் கண்டனம்

 தி.க., வீரமணிக்கு பிராமண ஸமாஜம் கண்டனம்

 தி.க., வீரமணிக்கு பிராமண ஸமாஜம் கண்டனம்


ADDED : மே 17, 2026 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 12:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பழநி: ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் நேர்மையை சந்தேகப்படுத்திய தி.க., வீரமணியின் கருத்துக்கு தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் மாநில தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தமிழ்நாடு அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை செயலாளராக ஸ்வர்ணா நியமிக்கப்பட்டு இருப்பதை சமூக அடிப்படையில் கேள்வி எழுப்பியுள்ள வீரமணி கருத்தை தமிழ்நாடு பிராமண ஸமாஜம் கடுமையாக கண்டிக்கிறது. ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டின் நிர்வாகத்தில் நேர்மை, தார்மீகம், சட்டப்படி செயல்படுதல் ஆகியவற்றை கடமையாக கொண்டவர்கள். அவர்களின் சமூகப் பின்னணியை வைத்து அவர்களின் 'இம்பார்சியாலிட்டி' 'இன்டகிரிட்டி'யை சந்தேகப்படுவது அதிகாரியின் தனிப்பட்ட கண்ணியத்தையும் சேவை அமைப்பில் மதிப்பையும் பாதிக்கும் செயலாகும்.

தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த முடிவு நிர்வாகத் தேவைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகும். சமூக அடிப்படையில் குற்றம் சாட்டுவது ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளுக்கு எதிரானது. அதிகாரியின் பணியை மதித்து சேவையை ஆதரிப்பது தான் அனைவரின் கடமை என வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us