அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் பிராமணர் சங்கம் போர்க்கொடி
அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும் பிராமணர் சங்கம் போர்க்கொடி
ADDED : ஏப் 12, 2025 01:25 AM

'வக்கிரம் கலந்து, மத கலாசாரத்தை இழிவுபடுத்தி பேசிய பொன்முடியை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்திஉள்ளது.
சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
திராவிடர் கழகத்தின் சார்பில் நடந்த ஒரு கூட்டத்தில், வனத் துறை அமைச்சர் பொன்முடி, ஹிந்து மதத்தை கொச்சைப்படுத்தி பேசியதை, தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தான், ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் அமைச்சர் என்பதை மறந்து, தரம் தாழ்ந்து பேசியது, அவரது வக்கிரப் புத்தியை காட்டுகிறது.
பொது மேடையில் ஏதோ ஒரு விலைமாது கதை ஒன்றைக் கூறி, அதில் தேவையில்லாமல் சைவம் மற்றும் வைணவம் என்று கீழ்த்தரமான விமர்சனங்களை கூறி, ஹிந்து மத சின்னங்களையும், பழக்க வழக்கங்களையும் கொச்சைப்படுத்தி இழிவாக பேசியுள்ளார்.
இது, ஹிந்துக்களின் மனதை பெரிய அளவில் காயப்படுத்தியுள்ளது. எனவே, பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து, முதல்வர் நீக்க வேண்டும். ஏற்கனவே, சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, கைதாக வேண்டிய நேரத்தில் உயர் நீதிமன்றம் தலையிட்டு, அவரை காப்பாற்றியது மிகுந்த விமர்சனங்களுக்கு உள்ளானது.
இந்நிலையில், இதுபோன்ற தரம் தாழ்ந்த, வக்கிரப் பேச்சு குறிப்பாக ஹிந்து மத கலாசாரத்தை இழிவுபடுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் அமைச்சராக தொடர தகுதியில்லாதவர். எனவே, பொன்முடிக்கு முதல்வர் தக்க தண்டனை கொடுப்பார் என்று நம்புவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

