உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மார் 19, 2024 06:13 AM
அ நிறம் | அளவு
மதுரை : சேலம் மரவனேரி காஞ்சி சங்கரமடத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில நிர்வாகக் குழு சிறப்பு கூட்டம் நடந்தது. தலைவர் சி.ஜி.வி.கணேசன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சங்கர ராமநாதன், பொருளாளர் ஜெயராமன், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தேர்தலில் நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சியை கருத்தில் கொண்டு, சனாதன தர்மத்தை காத்திட, நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமராக பொறுப்பேற்க வேண்டும். ஹிந்து விரோதிகளுக்கு, பிராமணர்களை அவதுாறு செய்பவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
