பஞ்சாபிலும் காலை உணவு திட்டம்: பகவந்த் மான் தகவல்
பஞ்சாபிலும் காலை உணவு திட்டம்: பகவந்த் மான் தகவல்
ADDED : ஆக 26, 2025 07:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை; 'தமிழகத்தை போல பஞ்சாப் மாநிலத்திலும், காலை உணவு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அம்மாநில முதல்வர் பகவந்த் மான் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:
தமிழகம் கல்வி, உள்கட்டமைப்பு உட்பட பல துறைகளில் முன்னணியில் உள்ளது. இந்த திட்டங்கள் குறித்து, நாங்கள் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் தற்போது மதிய உணவு திட்டம் செயல் படுத்தப்படுகிறது. காலை உணவு திட்டத்தை, தமிழகத்தை பின்பற்றி பஞ்சாபில் துவங்குவதற்கான முயற்சியில் ஈடுபட உள்ளோம். பஞ்சாப் மாநிலத்தில் நடக்கும் விழாக்களில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.