பில் தொகை விடுவிக்க லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் அதிகாரி!
பில் தொகை விடுவிக்க லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் அதிகாரி!
ADDED : டிச 04, 2024 08:44 PM

ராமநாதபுரம்: அரசு ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய முதுகுளத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
அரசு ஒப்பந்த பணிக்கான பில் தொகையை விடுவிக்குமாறு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் ஒப்பந்ததாரர் ஒருவர் மனு கொடுத்திருந்தார். இந்தத் தொகையை விடுவிக்க வேண்டுமெனில், ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால் பாண்டியன் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர், இது தொடர்பாக ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால் பாண்டியனுக்கு அந்த ஒப்பந்ததாரர் லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார்.
அப்போது, மறைந்திருந்த டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், பால் பண்டியனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.