sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே? (12)

/

லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே? (12)

லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே? (12)

லஞ்சம் யாருக்கு எவ்வளவு எங்கே? (12)


PUBLISHED ON : பிப் 20, 2023 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 20, 2023 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லஞ்சப் பேர்வழிகளை அம்பலப்படுத்த, 'லஞ்சம் - என்னிடம் பறித்தனர்' பகுதி துவக்கப் பட்டுள்ளது. இப்பகுதி திங்கள்தோறும் 'தினமலர்' இதழில் வெளியாகும். வாசகரின் இந்த வார உள்ளக்குமுறல் இதோ:

லஞ்சம் இல்லாமல் அரசு வேலை மக்களுக்குத் துவங்கும் சுபவேளை


ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்குச் சென்றால் லஞ்சம் இன்றி எதுவும் செய்ய முடியாது, இடைத்தரகர் உதவி கட்டாயம் தேவை என்ற புகார் இருக்கிறது. லைசென்ஸ் பெறுதல், புதுப்பித்தல், வாகனப்பதிவு என அனைத்துக்கும் லஞ்சம் என்ற நிலையை மாற்ற முடியும்.

லஞ்சத்தை ஒழிக்க, முதலில் அந்தப் பணிக்கு வருபவர்கள் பணம் கொடுத்து, அரசுப் பணி பெறாதவர்களாக இருக்க வேண்டும். லஞ்சம் கொடுத்து உள்ளே நுழைந்தவர்கள் அந்தப் பணத்தை திரும்ப எடுக்கவே பார்ப்பர்.

அதேபோல, பதவி உயர்வு, பணியிட மாற்றம் போன்றவற்றுக்கும் பணம் கொடுத்து பெறும் நிலை இருக்கக் கூடாது. லஞ்சம் வாங்காமல் நேர்மையாக இருக்கும் அதிகாரிகளும் இருக்கவே செய்கிறார்கள்.

நேர்மையானவர்கள் கூட லஞ்சத்துக்கு காரணமாகிவிடும் வாய்ப்பு உள்ளது. காசு கொடுக்காமல் பணிக்கு சேர்ந்து, மிக நேர்மையாக இருக்கிறேன் என்பதற்காக விதிமுறைகளைக் கடுமையாக பின்பற்றி, மக்களை நம்மிடம் இருந்து வெகுதூரம் விலக்கி வைத்து விடக்கூடாது.

விதிமுறைகள், தவறான முறையில் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான். விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துவதே தவறுக்கு காரணமாக அமைந்துவிடக்கூடாது. சிலருக்கு விதிமுறைகள் தெரியாமல் இருக்கும்.

அவர்களுக்கு நாம் உதவலாம். வழிமுறைகளை சொல்லித் தர வேண்டும்.

டிரைவிங் லைசென்ஸ்கு விண்ணப்பிக்கும் ஒருவருக்கு மிக நன்றாக ஓட்டத் தெரிந்தால் போதும். அவர் கொண்டு வரும் வாகனத்தில் அது இல்லை, இது இல்லை என மிகக் கடுமை காட்டினால், அவர் இடைத்தரகரை அணுகுவார். அது லஞ்சத்துக்கு வழிவகுக்கும்.

பணம் கொடுக்காமல் அரசுப்பணி, பதவி உயர்வு, இடமாற்றத்துக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை என, வெளிப்படையான அரசு நிர்வாகம் இருந்தாலே, பெரும்பாலான லஞ்சத்தை ஒழித்து விட முடியும்.

உதயணன்,

இணை கமிஷனர் (ஓய்வு),

வட்டார போக்குவரத்துத் துறை

தொடரும்...

லஞ்சம் தொடர்பாக புகார் தெரிவிக்க....

மாநில லஞ்ச ஒழிப்புத்துறை,
No.293, MKN சாலை,ஆலந்துார்,
சென்னை - 600 016
இ-மெயில்: dvac@nic.in
தொலைபேசி : 044-22321090 / 22321085 / 22310989 / 22342142








      Dinamalar
      Follow us