UPDATED : டிச 05, 2024 03:18 AM
ADDED : டிச 05, 2024 03:15 AM

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் முன்னோர்கள் வசித்ததற்கு அடையாளமாக செங்கல் கட்டுமான சுவர் தென்பட்டது.
விஜய கரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 16 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, தங்க மணி உள்ளிட்ட 2650 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் குழிகளில் செங்கல் கட்டுமான சுவர்கள் தென்பட்ட நிலையில் அதிக அளவில் முழுமையான , உடைந்த நிலையில் செங்கற்கள் கண்டெடுக்கப்பட்டன. புதிதாக தோண்டப்பட்ட 16 வது குழியிலும் செங்கல் கட்டுமான சுவர் தென்பட்டது.
![]() |
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில்
'' முன்னோர்கள் தொழில் கூடம் நடத்தியதற்கான பல்வேறு சான்றுகள் கிடைத்து வருகின்றது.
ஏற்கனவே நடந்த இரண்டு அகழாய்விலும் செங்கல் கட்டுமான சுவர் தென்பட்டதில்லை.
தற்போது இதுவரையிலும் 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளது. அனைத்து குழிகளிலுமே உடைந்த, சிதைந்த செங்கற்கள், செங்கல் கட்டுமான சுவர்கள் தென்பட்டுள்ளது.
இதன் மூலம் முன்னோர்கள் இங்கேயே வசித்து, தொழிற்கூடம் நடத்தி வந்தது உறுதியாகிறது''என்றார்.