sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தம்பியை வெட்டிய அண்ணன் கைது 

/

 தம்பியை வெட்டிய அண்ணன் கைது 

 தம்பியை வெட்டிய அண்ணன் கைது 

 தம்பியை வெட்டிய அண்ணன் கைது 


ADDED : மார் 22, 2026 09:59 PM

Google News

ADDED : மார் 22, 2026 09:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி:குடும்ப பிரச்னையில் தம்பியை வெட்டிய பாசக்கார அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி, கோழியூரை சேர்ந்தவர் சின்னசாமி மகன் உத்தம பிரபு 38; இவரது சகோதரர் மகேந்திரன், 42; இந்த இருவரின் தாய் சந்திராவை மகேந்திரன் மனைவி ரேவதி திட்டினார். இதனை உத்தமபிரபு தட்டி கேட்டதால், அண்ணன், தம்பிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த மகேந்திரன் நேற்று நள்ளிரவு 1:00 மணியளவில் உத்தமபிரபுவின் வீட்டிற்குள் புகுந்து, தூங்கிக் கொண்டிருந்தவரை கத்தியால் கழுத்தில் வெட்டினார்.

ரத்த வெள்ளத்தில் துடித்த உத்தமபிரபுவை அருகிலுள்ளவர்கள் மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து புகாரின் பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவாக இருந்த மகேந்திரனை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us