மொபைல் அழைப்புகள் துண்டிக்கப்படுவதற்கு தீர்வு பி.எஸ்.என்.எல்., நடவடிக்கை
மொபைல் அழைப்புகள் துண்டிக்கப்படுவதற்கு தீர்வு பி.எஸ்.என்.எல்., நடவடிக்கை
ADDED : மே 03, 2026 12:34 AM
மொபைலில் பேசிக் கொண்டிருக்கும்போதே, அழைப்புகள் துண்டிக்கப்படும் பிரச்னைக்கு தீர்வு காண, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட, குறைந்த விலையில், 'ரீசார்ஜ்' திட்டங்களை வைத்துள்ளது.
எனினும், பழைய உட்கட்டமைப்புடன் கூடியட வர்கள், வாடிக்கையாளர் களை கையாள்வதில் சொதப் பல், நெட்ஒர்க் பிரச்னை போன்றவற்றால், இந்நிறுவனம் தடுமாறி வருகிறது.
'ஆன்லைன்' செயலி களை பயன்படுத்தும்போது, 'நெட்வொர்க்' கிடைக்கா மல் போவது, தொடர் கதையாக உள்ளது.
இவற்றுக்கு தீர்வு காண, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலுார், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், உட்கட்டமைப்பை மேம்படுத்த, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
இது குறித்து, தமிழக வட்ட பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது:
வாடிக்கையாளர்கள் சந்திக்கும், 'நெட்வொர்க்' பிரச்னைக்கு தீர்வு காண, பழைய தொழில்நுட்பக் கருவிகளை அகற்றிவிட்டு, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்திற்கு மாற்றும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகம் முழுதும் 6,000க்கும் மேற்பட்ட புதிய டவர்கள் அமைக்கப் படுகிறது. இதன் வாயிலாக, 'கால் ட்ராப்' பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். தடையற்ற அதிவேக இணைய சேவை, உறுதி செய்யப்படும்.
மத்திய அரசின், 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தின் கீழ், மேம்பட்ட மென்பொருள் மற்றும் வன்பொருட்கள் பொருத்தப்படுவதால், அடுத்த சில மாதங்களில், சென்னை முதல் கிராமப்புறங்கள் வரை, அனைத்து இடங்களிலும், பி.எஸ்.என்.எல் சேவை, வாடிக்கையாளர்க ளுக்கு தரமாக கிடைக்கும்.
தனியார் நிறுவனங்களுக்கு இணையாகவும், அதே சமயம் குறைந்த விலையிலும், பொதுமக்களுக்கு பி.எஸ்.என்.எல்., சேவை கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
