ADDED : ஜன 19, 2024 12:37 AM
சென்னை:தமிழக அரசின் 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்புக்கான ஆலோசனைக் கூட்டம்,தலைமைச் செயலகத்தில் நடந்தது.
தமிழக அரசு வரும், 2024 - 25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தயாரிப்பு பணிகளை துவக்கி உள்ளது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் தலைமையில் நடந்தது. தொழில்துறை அமைச்சர் ராஜா, வீடியோ கான்பரன்ஸ் வழியே பங்கேற்றார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர், அடுத்த மாதம் துவங்க உள்ளது. கவர்னர் உரை, அதன் மீதான விவாதம், அதைத் தொடர்ந்து, பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடக்கும். மானிய கோரிக்கை மீதான விவாதம், லோக்சபா தேர்தலுக்கு பின் நடக்கும் என, தகவல் வெளியாகி உள்ளது.

