ADDED : ஜூலை 27, 2025 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீஹாரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து, 65 லட்சம் வாக்காளர்களை நீக்கி இருக்கிறார்கள். பீஹாரில் இருந்து தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பலர் வேலை பார்க்கிறார்கள். பெயர்களை நீக்கிவிட்டால் எப்படி ஓட்டு போடுவார்கள். பட்டியலில், 22 லட்சம் இறந்து போன வாக்காளர்களின் பெயர்கள் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த பட்டியலை வைத்து தானே கடந்தாண்டு மோடி பிரதமர் ஆனார்.
இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் சிவப்பு குறியிட்டு அடையாளப்படுத்தலாமே? போலி ஓட்டுப்பதிவை தடுக்க பல வழிகள் உள்ளன. பெரிய புல்டோசரைக் கொண்டு, வாக்காளர் பட்டியல் மீது, தேர்தல் ஆணையம் தாக்குதல் நடத்துகிறது.
- சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரஸ்.