sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

தமிழகம்

/

சொந்த ஊர் பயணம்... பஸ், விமான கட்டணம் பல மடங்கு எகிறியது!

/

சொந்த ஊர் பயணம்... பஸ், விமான கட்டணம் பல மடங்கு எகிறியது!

சொந்த ஊர் பயணம்... பஸ், விமான கட்டணம் பல மடங்கு எகிறியது!

சொந்த ஊர் பயணம்... பஸ், விமான கட்டணம் பல மடங்கு எகிறியது!

10

UPDATED : அக் 11, 2024 06:00 AM

ADDED : அக் 11, 2024 05:56 AM

Google News

UPDATED : அக் 11, 2024 06:00 AM ADDED : அக் 11, 2024 05:56 AM

10

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி, சென்னையில் வசித்து வருவோர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றதால், பேருந்து, ரயில், விமான நிலையங்களில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. அரசு பேருந்துகளில் மட்டும் 3.50 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அடுத்து சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து லட்சகணக்கானோர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். பயணியரின் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இரண்டு நாட்களாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாவது நாளாக, நேற்றும் பயணியர் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு சென்றதால், கிளாம்பாக்கம், கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலும், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் கூட்டம் அலைமோதியது.

Image 1331449
தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வழக்கமான விரைவு ரயில்கள், சிறப்பு கட்டண ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணியர் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னையில் முக்கிய நுழைவு பகுதிகளான ஜி.எஸ்.டி., சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில், நேற்று மாலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: ஆயுதபூஜையொட்டி தொடர் விடுமுறை வருவதால், இரண்டு நாட்களாக மக்கள் சொந்த ஊர்களுக்கு ஆர்வமாக புறப்பட்டு செல்கின்றனர். சென்னையில் இருந்து தினமும் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளோடு, நேற்று முன்தினம் 700 சிறப்பு பேருந்துகளும், நேற்று 2,000 சிறப்பு பேருந்துகளும் இயக்கப் பட்டன.

கடந்த இரண்டு நாட்களில் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அரசு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். 50,000க்கும் மேற்பட்டோர், அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களோடு, பல்வேறு வழித்தடங்களில் 10க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், சென்னையில் இருந்து ரயில்களில் மட்டும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்' என்றனர்.

Image 1331450

விமான கட்டணம் 3 மடங்கு உயர்வு

தென்மாவட்டங்களுக்கு ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் செல்ல முடியாதவர்கள், ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்தனர். ஆம்னி பேருந்துகளின் கட்டணம் வழக்கத்தை விட 40 சதவீதம் வரை அதிகரித்தது. தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து மற்ற நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களின் கட்டணம் உயர்ந்துள்ளது.சென்னையில் இருந்து மதுரை, கோவை, திருச்சி, துாத்துக்குடி, சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் பயணியர் கூட்டம் வழக்கத்தை விட நேற்று அதிகரித்தது. அதன் காரணமாக, விமான நிறுவனங்களும் கட்டணத்தை மூன்று மடங்கு வரை உயர்த்தியுள்ளது.

Image 1331452

      Dinamalar
      Follow us