ADDED : பிப் 06, 2024 09:51 PM
சென்னை:அரசு போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை, அரசு ஏற்க வேண்டும்; 15வது புதிய ஊதிய ஒப்பந்த பேச்சை துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி., சங்கம் சார்பில், மதுரை, நீலகிரி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, காரைக்குடி உள்ளிட்ட போக்குவரத்து மண்டல அலுவலகங்கள் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதுகுறித்து, ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலர் ஆறுமுகம் கூறுகையில், ''சென்னையில் இன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இன்று மதியம் நடக்கும் முத்தரப்பு பேச்சில், இனியும் தாமதிக்காமல், தொழிலாளர்களின் கோரிக்ககைளை நிறைவேற்ற, நிர்வாகம் முன்வர வேண்டும். இந்த பேச்சுக்கு பின், அடுத்தகட்ட நடவடிக்கையை தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிக்கும்,'' என்றார்.

