ADDED : டிச 29, 2025 05:50 AM

சென்னை: பொங்கல் பண்டிகை அன்று நடக்கவிருந்த, சி.ஏ., தேர்வு, ஜனவரி, 19ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்திய பட்டய கணக்காளர் நிறுவனமான, ஐ.சி.ஏ.ஐ., சார்பில், சி.ஏ., எனப்படும் பட்டய கணக் காளர் பணித்தேர்வு, ஆண்டு தோறும் மூன்று முறை நடத்தப்படுகிறது. இந்த தேர்வு, சி.ஏ., அடிப் படை, இடைநிலை மற்றும் இறுதி என, மூன்று நிலைகளாக நடத்தப்படுகிறது.
அதில், தேர்ச்சி பெறுவோர் மட்டுமே ஆடிட்ட ராக முடியும். அந்த வகையில், 2026ம் ஆண்டுக்கான, சி.ஏ., தேர்வு ஜனவரியில் நடக்கிறது.
இதற்கிடையில், இடைநிலை தேர்வில், 'குரூப் 2' பகுதியானது, ஜன., 15ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் பொங்கல் பண்டிகை என்பதால், சி.ஏ., தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், ஜனவரி, 15ல் நடப்பதாக இருந்த சி.ஏ., தேர்வு, ஜன., 19ல் நடக்கும் என, இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், 'மஹாராஷ்டிரா மாநிலத்தில், ஜன., 15ம் தேதி நகராட்சி தேர்தல் நடக்க உள்ளதால், அன்றைய தினம் நடப்பதாக இருந்த சி.ஏ., தேர்வு, நாடு முழுதும் ஜன., 19ல் நடக்கும்.
'தேர்வு நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. மற்ற தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

