உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 23, 2026 11:34 PM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னை தலைமை செயலகம் முன், கேபிள் 'டிவி' வினியோகஸ்தர்கள் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தலைமை செயலகம் முன்புள்ள பூங்காவில், கேபிள் 'டிவி' வினியோகஸ்தர்கள், ஆப்பரேட்டர்கள், இன்டர்நெட் வழங்குவோர் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெக் 'டிவி' செட்டாப் பாக்ஸ் சேவை, ஒரு மாதத்திற்கும் மேலாக முடங்கி உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். மாவட்டந்தோறும் செட்டாப் பாக்ஸ் பழுது பார்க்கும் மையம் அமைக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அவர்கள் கோஷமிட்டனர்.
பின்னர் தலைமை செயலகம் சென்று, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் அருண் தம்புராஜை சந்தித்து மனு அளித்தனர்.
