ADDED : நவ 14, 2026 06:56 AM

கரூர்:குழந்தைகள்
தின விழாவையொட்டி, ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், மாணவ,
மாணவியருக்கு கேக் வழங்கும் விழா நடந்தது.
அதில், 265 மாணவர், 236
மாணவியர் என, 501 பேருக்கு கேக் மற்றும் முதல்வர் விஜயின் குழந்தைகள் தின
வாழ்த்து அட்டைகளை, கலெக்டர் பிரசன்னா ராமசாமி வழங்கினார்.
கிருஷ்ணராயபுரம் த.வெ.க., - எம்.எல்.ஏ., சத்யா, மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர் ராஜூ, கரூர் ஆர்.டி.ஓ., கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள்
உடனிருந்தனர்.* குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
நடந்த விழாவில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை
இயக்குனரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான தினேஷ்
பொன்ராஜ் ஆலிவர், மாணவியருக்கு கேக்குகளை வழங்கினார். டி.ஆர்.ஓ.,
தங்கவேல்
உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
*
கரூர் மாவட்டத்தில், 875 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை
சேர்ந்த, முதல் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியர்,
ஆசிரியர்கள், அலுவலக பணியாளர் என, 83 ஆயிரத்து, 97 பேருக்கு கேக்
வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 77 ஆயிரத்து, 962 மாணவ, மாணவியருக்கு
குழந்தைகள் தின வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது.
