தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/‘மின் ரீடிங்’ குளறுபடியால் பாதிப்பு கணக்கீடு ஆய்வாளர் ‘சஸ்பெண்ட்’

‘மின் ரீடிங்’ குளறுபடியால் பாதிப்பு கணக்கீடு ஆய்வாளர் ‘சஸ்பெண்ட்’

‘மின் ரீடிங்’ குளறுபடியால் பாதிப்பு கணக்கீடு ஆய்வாளர் ‘சஸ்பெண்ட்’


UPDATED : அக் 10, 2026 02:27 AM

ADDED : அக் 10, 2026 02:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 02:27 AM ADDED : அக் 10, 2026 02:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், சின்னதிருப்பதியை சேர்ந்தவர் சுரேஷ், 43; தமிழக வாழ்வுரிமை கட்சியின், சேலம் வடக்கு மாவட்ட தலைவர். சமீபத்தில் இவரது வீட்டுக்கு, 25,098 ரூபாய் மின் கட்டணம் விதிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர், அஸ்தம்பட்டி உதவி பொறியாளர் அலுவலகத்தில் முறையிட்டு, அங்கேயே போராட்டம் நடத்தினார். இது சமூகவலைதளங்களில் பரவியது.

இதுதொடர்பான விசாரணையில் மின் கணக்கீடு ஆய்வாளர் கன்னியப்பன், வீடுகள் தோறும் சென்று கணக்கீடு மேற்கொள்வதற்கு பதில், ஒரே இடத்தில் அமர்ந்து, முந்தைய ரீடிங் அளவில் சற்று கூட்டியும், குறைத்தும், கணினியில் பதிவேற்றம் செய்தது தெரிந்தது.

மேலும், அவர் விடுமுறையில் சென்றபோது, அவருக்கு மாற்றாக சென்ற மின் கணக்கீட்டாளர் மூலம், 6 மாதங்களாக நடந்த மின் கணக்கீடு குளறுபடி அம்பலமானது. தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மின் நுகர்வோர் பலர் நேரடியாகவும், மின்னஞ்சல் மூலமும் புகார் அனுப்பினர்.

ஏற்கனவே ஏற்காட்டில் பணியாற்றிய கன்னியப்பன், அதேபோல் மின் கணக்கீடு குளறுபடி செய்ததால், அஸ்தம்பட்டிக்கு இடமாற்றப்பட்டதும் தெரிந்தது. இதனால் கன்னியப்பனை சஸ்பெண்ட் செய்து, இரு நாட்களுக்கு முன், உதவி செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us