sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

"முதல்வர் ஜெயலலிதாவை நிரந்தர முதல்வர் என அழைக்க வேண்டும்'

/

"முதல்வர் ஜெயலலிதாவை நிரந்தர முதல்வர் என அழைக்க வேண்டும்'

"முதல்வர் ஜெயலலிதாவை நிரந்தர முதல்வர் என அழைக்க வேண்டும்'

"முதல்வர் ஜெயலலிதாவை நிரந்தர முதல்வர் என அழைக்க வேண்டும்'


ADDED : ஆக 11, 2011 12:11 AM

Google News

ADDED : ஆக 11, 2011 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : ''முதல்வர் ஜெயலலிதாவை நிரந்தர முதல்வர் என அழைக்க வேண்டும்,'' என்று சட்டசபையில் உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் பேசியதும், முதல்வர் உட்பட உறுப்பினர்களும் சிரித்தனர்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது, ''கன்னியாகுமரியிலிருந்து களியக்காவிளைக்கு மேற்கு கடற்கரை சாலை வழியாக பஸ் இயக்கப்படுமா? என்ற கேள்வியை, உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் எழுப்பினார். தொடர்ந்து அவர் பேசும்போது, ''சட்டசபையில் பேசும் உறுப்பினர்கள் மூன்றாவது முறையாக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுள்ளார் என பேசுகின்றனர். இனிமேல் யாரும் அப்படி பேசாமல், நிரந்தர முதல்வர் என்று தான் பேச வேண்டும்,'' என்றார். அப்போது முதல்வர் ஜெயலலிதா உட்பட உறுப்பினர்களும் சிரித்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து பேசியதாவது: மேற்கு கடற்கரை சாலையை இணைத்து மணக்குடி முதல் நீரோடி வரை மூன்று பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரி கீழமணக்குடி பாலம் சுனாமியால் சேதமாகி விட்டதால், கன்னியாகுமரியிலிருந்து பஸ் இயக்க முடியாத நிலை உள்ளது. பாலம் வேலை முடிந்தவுடன் மேற்கு கடற்கரைச்சாலை வழியாக கன்னியாகுமரி - களியக்காவிளைக்கு பஸ் இயக்க பரிசீலிக்கப்படும். இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us