சிறந்த கால்நடை வளர்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
சிறந்த கால்நடை வளர்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 14, 2025 06:06 AM

சென்னை:'ஆவின் சார்பில், கால்நடைகளுக்கான செயற்கை கருவூட்டல் மற்றும் முதலுதவி குறித்த சான்றிதழ் பயிற்சி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்' என, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
சென்னை, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலுார், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நடக்கும் இந்த நேரடி பயிற்சி வகுப்புகளில், கால்நடைகளை செயற்கை கருவூட்டலுக்கு தயார்படுத்துதல், மரபணுவை மேம்படுத்தி செயற்கை கருவூட்டல் நுட்பங்களை திறம்பட செயல்படுத்துதல் குறித்த பயிற்சிகள் அளிக்கப்படும்.
மேலும், திறமையான மந்தை மேலாண்மைக்கான இனப்பெருக்கம், சுகாதாரம் மற்றும் உற்பத்தித் திறன் குறித்த பதிவுகளை பராமரித்தல், இனப்பெருக்க சேவைகள் வழங்குதல், சிறந்த கால்நடை வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல், கிராமப்புற கால்நடை விவசாயிகளுடன் தொடர்பு கொள்வது உள்ளிட்ட செயல்முறை விளக்க பயிற்சிகள் வழங்கப்படும்.
இப்பயிற்சிக்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 56 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4399 என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதில் பங் கேற்போருக்கு சான்றிதழ் வழங்கப்படுவதுடன், தமிழ் நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பில் வேலை வாய்ப்பு பெறவும் வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.