ADDED : ஜன 01, 2025 10:21 PM
சென்னை:'மறைந்த வன உயிரியலாளர் ஏ.ஜே.டி.ஜான்சிங் நினைவு விருது பெற, வரும், 31க்குள் விண்ணப்பிக்கலாம்' என, வனத்துறை அறிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை பூர்விகமாக கொண்டவர் வன உயிரியல் ஆராய்ச்சியாளர் ஏ.ஜே.டி.ஜான்சிங்; 2024ல் இறந்தார். வன உயிரின ஆராய்ச்சி மற்றும் வன உயிரின பாதுகாப்பில் போற்றத்தக்க முக்கிய பங்கு வகித்தவர்.
இவரது நினைவை போற்றும் வகையில், வன உயிரின ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு விருது வழங்க, ஏ.ஜே.டி.ஜான்சிங் நினைவு விருது நிறுவப்பட்டுள்ளது.
பாராட்டு பத்திரம் மற்றும், 25 லட்சம் ரூபாய் பரிசு, வனத்துறையால் வழங்கப்பட உள்ளது.
இந்த விருது பெற தகுதி உடைய நபர்கள், வரும், 31க்குள் விண்ணப்பிக்கலாம். தங்களது விண்ணப்பங்களை, 'வனத்துறை தலைவர், வனத்துறை தலைமையகம், கிண்டி - வேளச்சேரி பிரதான சாலை, சென்னை - 600032' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கூடுதல் தகவல்களை பெற, www.forests.tn.gov.in/ என்ற இணையதளத்தை அணுகலாம் என, வனத் துறை அறிவித்துஉள்ளது.

