உள்ளடக்கத்திற்கு செல்ல
மாம்பழம் உற்பத்தி திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு அழைப்பு
மாம்பழம் உற்பத்தி திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு அழைப்பு
UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 11:52 PM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழக விவசாயிகள், வெளிநாடுகளுக்கு மாம்பழம் ஏற்றுமதி செய்வதற்காக, சர்வதேச தரத்தில் மாம்பழம் உற்பத்திக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியை, தமிழக அரசின், ‘டி.என்.எபெக்ஸ்’ நிறுவனம் அளிக்க உள்ளது.
இந்த பயிற்சி முகாம், விழுப்புரம் மாவட்டம் வல்லம், வேளாண் விரிவாக்க மையத்தில், வரும் 13ம் தேதி நடக்க உள்ளது. இதில், மாம்பழத்தை சிறந்த முறையில் சாகுபடி செய்வதற்கான, சிறந்த வேளாண் நடைமுறை குறித்த அறிமுகம், பூச்சி மருந்து மேலாண்மை, பண்ணை பதிவேடு பராமரிப்பு விளக்கம் உள்ளிட்டவை தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
பங்கேற்ற விரும்புவோர், 79041 57049, 75502 72954 மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டு, பதிவு செய்யலாம்.
