வீடுகளுக்கு சென்று ஓட்டு போட அழைப்பு: கட்சியினருக்கு பா.ஜ., அறிவுரை
வீடுகளுக்கு சென்று ஓட்டு போட அழைப்பு: கட்சியினருக்கு பா.ஜ., அறிவுரை
ADDED : ஏப் 16, 2024 03:53 AM

சென்னை: வேட்பாளருடன் ஒரே சமயத்தில் கூட்டமாக செல்வதற்கு பதில், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, வாக்காளர்களை சந்திக்குமாறு கட்சியினரை பா.ஜ., அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது: பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுடன், ஒரே சமயத்தில் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட்டமாக செல்வதற்கு பதில், குறைந்த நபர்கள் பிரசாரத்திற்கு சென்றால் போதும்.
மற்றவர்கள் அனைவரும், தங்கள் பூத் கமிட்டிக்கு உட்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, 'தி.மு.க.,வை ஏன் நிராகரிக்க வேண்டும்; தே.ஜ., கூட்டணியை ஏன் ஆதரிக்க வேண்டும்' என்பதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.
வீடுகளில் வாக்காளர்களை சந்தித்து ஓட்டு போட அழைப்பு விடுப்பதுடன், அந்த ஓட்டுகளை பா.ஜ.,வுக்கு போட தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

