sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 போராடுவோரை அழைத்து பேசுங்கள்: முதல்வரிடம் மா.கம்யூ., வலியுறுத்தல்

/

 போராடுவோரை அழைத்து பேசுங்கள்: முதல்வரிடம் மா.கம்யூ., வலியுறுத்தல்

 போராடுவோரை அழைத்து பேசுங்கள்: முதல்வரிடம் மா.கம்யூ., வலியுறுத்தல்

 போராடுவோரை அழைத்து பேசுங்கள்: முதல்வரிடம் மா.கம்யூ., வலியுறுத்தல்

3


ADDED : ஜன 14, 2026 07:12 AM

Google News

ADDED : ஜன 14, 2026 07:12 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் பெ.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், ரவீந்திரன் ஆகியோர், நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

அப்போது, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின், கால் நுாற்றாண்டு கோரிக்கையான, ஓய்வூதிய பிரச்னைக்கு தீர்வு கண்டதற்கு, பாராட்டு தெரிவித்தனர்.

சத்துணவு ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களின் ஓய்வூதியத்தை, உயர்த்தி வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக கணிக்கிட்டு, உரிய பலன்களை வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்குக்கான,

மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்க வேண்டும்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடி வரும், இடைநிலை ஆசிரி யர்களை அழைத்து பேசி, சுமூகமான முறையில் தீர்வு காண வேண்டும். 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, முதல்வரிடம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us