ADDED : ஜன 26, 2026 02:51 AM

வரும் கல்வியாண்டு முதல், 'நீட்' அடிப்படையில் இளங்கலை பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி பட்டப் படிப்புக்கு சேர்க்கை நடக்கும் என, தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் அறிவித்துள்ளது.
இம்முடிவை திரும்ப பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
நீட் தேர்வை அரசியலாக்கி, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தி.மு.க., அச்சத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.
இருப்பினும், தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சாதித்து, அதிக எண்ணிக்கையில் மருத்துவ படிப்பில் சேர்க்கின்றனர். பிசியோதெரபி படிப்புக்கு பெரும் மதிப்பும், அங்கீகாரமும் கிடைத்து உள்ளது.
இதை மறைத்து, நீட் எதிர்ப்பு அரசியல் செய்து, மாணவர்களையும், பெற்றோரையும் குழப்பி, மாணவர்கள் எதிர்காலத்துடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் விளையாடுவது கண்டனத்துக்குரியது.
- வானதி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,
