ADDED : அக் 20, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்:வேலுாரில் பா.ஜ., ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா அளித்த பேட்டி:
துார்தர்ஷன் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியோர் ஒரே ஒரு வரி மட்டும் விட்டுள்ளனர். இது பாடியவர்களின் பிழை. இது தொடர்பாக அவர்களைத்தான் விசாரிக்க வேண்டும். ஆனால் தமிழக முதல்வரும், துணை முதல்வரும் விழாவில் கலந்து கொண்ட கவர்னரை தரம் தாழ்த்தி பேசுகின்றனர்.
இப்படித்தான் எல்லா விஷயங்களிலும் மலிவாக நடந்து கொள்கின்றனர்.
பொன்முடி உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது ஒரே பேராசிரியர் பல கல்லுாரியில் பணியாற்றியது முறைகேடானது. அதனால் தான் அவர் துறை மாற்றப்பட்டுள்ளார். தமிழக மின்சாரத் துறையில் பல விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.
அந்த துறை செயல்படுகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.