ADDED : டிச 06, 2024 06:52 AM

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் வாரிசு தான் பழனிசாமி. அவருடைய சொத்து தான் இரட்டை இலை. இதற்கு யாரும் உரிமை கோர முடியாது. பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரை அனைவரும் கூறியுள்ளனர்.
தீய சக்தியான தி.மு.க.,வை எதிர்த்து, எம்.ஜி.ஆரால் அ.தி.மு.க., துவங்கப்பட்டது. இந்நிலையில், சட்டசபையில் கருணாநிதியை கடவுள் நிலைக்கு உயர்த்திய பன்னீர்செல்வத்தை யாரும் ஏற்க மாட்டார்கள்.
கட்சியில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கே சின்னம் வழங்கப்படும். நீதிமன்றம் தெரிந்தோ, தெரியாமலோ பன்னீர்செல்வத்திடமும் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையத்தை முடிவெடுக்கச் சொல்லி இருக்கலாம். நல்ல முடிவுதான் வரும். சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் எந்த காலத்திலும் இணைக்கக் கூடாது என, தொண்டர்கள் நினைக்கின்றனர்.
-- பொன்னையன் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்