ரூ.2,000த்தை வைத்து 'ஏசி' வாங்க முடியுமா: அன்புமணி
ரூ.2,000த்தை வைத்து 'ஏசி' வாங்க முடியுமா: அன்புமணி
ADDED : பிப் 19, 2026 03:56 AM

சென்னை: தி.மு.க., ஆட்சியில், 15 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகம் தத்தளிப்பதாக, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டினார்.
சென்னையில் நேற்று நடந்த பா.ம.க., தொழிற்சங்க பேரவை பொதுக்குழு கூட்டத்தில், அவர் பேசியதாவது:
நாடு சுதந்திரம் அடைந்த பின், 74 ஆண்டுகளில் தமிழகத்தின் நேரடி கடன் 4.54 லட்சம் கோடி ரூபாய். ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், தி.மு.க., அரசு வாங்கிய கடன் 4.96 லட்சம் கோடி ரூபாய்.
இது தவிர, பொதுத்துறை நிறுவனங்கள் வாயிலாக, 5 லட்சம் கோடி ரூபாய் கடனை தி.மு.க., அரசு வாங்கியுள்ளது. இதையும் சேர்த்து, மொத்தம் 1௫ லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
தேர்தலுக்காக இந்த ஆண்டு பொங்கலுக்கு 3,000 ரூபாய் கொடுத்தனர். இப்போது, மகளிர் உரிமைத் தொகை பெறுவோருக்கு 5,000 ரூபாய் கொடுத்துள்ளனர். அதில், கோடைக் காலத்திற்காக 2,000 ரூபாய் கொடுத்துள்ளனர். இதை வைத்து, 'ஏசி' வாங்க முடியுமா?
இவ்வாறு அவர் பேசினார்.

