தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பல் பிடுங்கிய ஐ.பி.எஸ்., அதிகாரி 'சஸ்பெண்ட்' ரத்து

பல் பிடுங்கிய ஐ.பி.எஸ்., அதிகாரி 'சஸ்பெண்ட்' ரத்து

பல் பிடுங்கிய ஐ.பி.எஸ்., அதிகாரி 'சஸ்பெண்ட்' ரத்து


ADDED : ஜன 23, 2024 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2024 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உதவி எஸ்.பி.,யாக ஐ.பி.எஸ்., அதிகாரி பல்வீர் சிங் பணிபுரிந்தார். இவர், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி மற்றும் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்படும் நபர்களின் பற்களை பிடுங்கி தண்டனை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, தற்போது உள்துறை செயலராக உள்ள அமுதா தலைமையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது. பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். பின், இந்த விவகாரம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

பற்களை பிடுங்கியது தொடர்பான வழக்கு திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பல்வீர் சிங், சஸ்பெண்ட் செய்யப்பட்டு, 10 மாதங்களுக்கு மேலாகிறது. இதை திரும்ப பெற வேண்டும் என, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டும் வந்தது.

இந்நிலையில், பல்வீர் சிங் மீதான சஸ்பெண்ட் உத்தரவை அரசு நேற்று திரும்ப பெற்றுள்ளது. எனினும், நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்ப பல்வீர் சிங் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us