sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒரு லட்சத்தை தாண்டியது புற்றுநோய் பாதிப்பு

/

ஒரு லட்சத்தை தாண்டியது புற்றுநோய் பாதிப்பு

ஒரு லட்சத்தை தாண்டியது புற்றுநோய் பாதிப்பு

ஒரு லட்சத்தை தாண்டியது புற்றுநோய் பாதிப்பு


ADDED : பிப் 04, 2026 10:10 PM

Google News

ADDED : பிப் 04, 2026 10:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழகத்தில், கடந்த ஓராண்டில் மட்டும் புற்றுநோய் கண்டறியப்பட்டவர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

உணவு முறை மாற்றம், பழக்கவழக்கம் போன்றவற்றால், புற்று நோயாளிகள் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு, 53,022 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 2025ம் ஆண்டில், ஒரு லட்சத்து 97 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது . அதில், 46,555 ஆண்கள், 53,542 பெண்கள். அதாவது ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக புற்றுநோய் பதிவு திட்ட இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

2020 ல் 68,750 பேரும்2021ல் 76,968 பேரும்2022 ல் 89,265 பேரும்2023 ல்92,816 பேரும்2024 ல் 96,486 பேரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த எண்ணிக்கை முழுமையானதோ அல்லது அதிகாரப்பூர்வமானதோ அல்ல என அதிகாரிகள் கூறுகின்றனர்.

மாநிலம் முழுதும் முழுமையான விபரங்கள் சேகரிக்கப்பட்டால், எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, புற்றுநோய் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் அரியலுார், பெரம்பலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்களில், அதிகளவில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோய் பரவலில், முதல் இடத்தில் கேரளா மாநிலம் உள்ளது. அங்கு ஒரு லட்சம் பேரில், 173 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாவட்ட அளவில் பொறுத்த வரை, சென்னையில் 8,505 பேரும்காஞ்சிபரத்தில் 7,295 பேரும்வேலூரில், 6,525 பேரும் புற்றுநோயால் பாதிப்படைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us