sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிப்.,28 ல் மதுரை வருகிறார் பிரதமர் மோடி

/

பிப்.,28 ல் மதுரை வருகிறார் பிரதமர் மோடி

பிப்.,28 ல் மதுரை வருகிறார் பிரதமர் மோடி

பிப்.,28 ல் மதுரை வருகிறார் பிரதமர் மோடி

10


ADDED : பிப் 04, 2026 10:36 PM

Google News

10

ADDED : பிப் 04, 2026 10:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி, வரும் 28ம் தேதி மதுரை வர உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அ.தி.மு.க., தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணி சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் ஜன., 23ல் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், பிரதமர் மோடி பங்கேற்று, தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைத்தார்.

அங்கு பேசிய மோடி, 'நாங்கள் தமிழ் கலாசாரம் குறித்து, வெறும் வாய்ப்பந்தல் போடுபவர்கள் அல்ல. அதை பாதுகாப்பதில் உறுதிப்பாட்டோடு பணியாற்றி வருகிறோம். முருகனுக்கு விளக்கு போடுவது, விவாதப் பொருளாக ஆக்கப்பட்டது. அப்போது, நம் தலைவர்கள் பக்தர்களின் அதிகாரங்களுக்கும், உரிமைகளுக்கும் குரல் கொடுத்தனர். ஆனால், தி.மு.க.,வும், அதன் கூட்டணி கட்சிகளும், ஓட்டு வங்கியை குஷிப்படுத்த, நீதிமன்றத்தையும் கூட விட்டு வைக்காமல் அவமானப்படுத்தினர்' என்றார்.

அதன் தொடர்ச்சியாக, வரும், 28ம் தேதி மோடி மதுரை வருகிறார். அங்கு நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். முன்னதாக மோடி, திருப்பரங்குன்றம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.






      Dinamalar
      Follow us