ADDED : மார் 12, 2025 11:41 AM

சென்னை: சென்னை, சென்ட்ரல் பகுதியில் உள்ள, பயிற்சி மருத்துவ மாணவர் விடுதியில், இக்கும்பல் போதைப் பொருள் விற்றது தெரியவந்ததும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் தேரணிராஜன், நேற்று முன்தினம், விடுதியில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது, பயிற்சி டாக்டர்கள் தருண், 23, ஜெயந்த், 23, சஞ்சய் ரத்தினவேல், 23, ஆகியோர் தங்கி இருந்த அறையில், 149 கிராம் கஞ்சா மற்றும் வலி நிவாரணத்திற்காக மருத்துவ துறையில் பயன்படுத்தும் நான்கு கேட்டமைன் மருத்துவ குப்பிகள் இருப்பதை கண்டறிந்தார். இது தொடர்பாக, போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, பயிற்சி டாக்டர்கள் மூவரையும், போலீசார் கைது செய்தனர்; ஒருவர் தலைமறைவாகிவிட்டார். இவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த கும்பல் குறித்து துப்பு துலக்க, கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.இப்படையினர், சைதாப்பேட்டை சின்னமலையைச் சேர்ந்த ரோட்னி ரோட்ரிகோ, 26, என்பவரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர்.