வயநாடு மக்களுக்கு என் இதயத்தில் தனி இடம்; சகோதரியை வெல்ல வைக்க ராகுல் 'ஐஸ்'
வயநாடு மக்களுக்கு என் இதயத்தில் தனி இடம்; சகோதரியை வெல்ல வைக்க ராகுல் 'ஐஸ்'
ADDED : அக் 22, 2024 02:27 PM

புதுடில்லி: வயநாடு மக்கள் என் இதயத்தில் ஒரு தனித்துவமான இடத்தை பிடித்து விட்டனர் என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.
வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்., வேட்பாளர் பிரியங்கா நாளை (அக்.,23) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். வரும் நவ., 13ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இது குறித்து, சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வயநாடு தொகுதிக்கு பிரியங்காவை விட சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிட நாளை பிரியங்கா வேட்புமனு தாக்கல் செய்யும்போது, எங்களுடன் வாருங்கள். வயநாடு மக்கள் தேவைக்காக பார்லிமென்டில் அவர்களது குரலாக பிரியங்கா ஒலிப்பார். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல், எம்.பி., பதவியை ராஜினாமா செய்ததால், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.