UPDATED : ஏப் 13, 2026 05:09 PM
ADDED : ஏப் 13, 2026 05:05 PM

தூத்துக்குடி: எட்டயபுரம் அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர், குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு இன்னோவா காரில் சொந்த ஊர் திரும்பி கொண்டு இருந்தார். எட்டையபுரம் அருகே எம். கோட்டூர் விலக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்ற லாரி மீது கார் மோதியது.
விபத்தில் பாஸ்கரன், மனைவி வனிதா, உறவினர் வசந்தி மற்றும் கார் டிரைவர் பழனி ஆகியோர் உயிரிழந்தனர். அதில் பாஸ்கரனின் குழந்தைகள் சந்தியா மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்துவருகின்றனர்.
