டிப்பர் லாரியில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்
டிப்பர் லாரியில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார்
ADDED : பிப் 12, 2026 04:32 AM

வானுார்: புதுச்சேரி லாஸ்பேட் தேவகி நகரை சேர்ந்தவர் எழிலன், 64; இவர் நேற்று முன்தினம் சென்னைக்கு காரில் சென்று இரவு புதுச்சேரிக்கு திரும்பியுள்ளார். புதுச்சேரி சாரத்தை சேர்ந்த அருண்ராஜ், 25; காரை ஓட்டிச் சென்றார்.
இரவு 11;30 மணிக்கு, திண் டிவனம்-புதுச்சேரி பைபாஸ் சாலையில், இரும்பை சாலை சந்திப்பு, பாபா கோவில் அருகே சென்றபோது, முன்னே சென்ற டிப்பர் லாரியின் பின்பக்கமாக கார் மோதி சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. காரில் இருந்த இருவருக்கும் காயம் ஏற்பட்டு, காரி ல் சிக்கிக்கொண்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள், இருவரையும் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த டோல்கேட் ஊழியர்கள், ரோந்து போலீசார் சாலையில் கவிழ்ந்த காரை அப்புறப்படுத்தினர். ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

