தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தச்சு தொழிலாளி மர்மச்சாவு உடல் அழுகிய நிலையில் மீட்பு

தச்சு தொழிலாளி மர்மச்சாவு உடல் அழுகிய நிலையில் மீட்பு

தச்சு தொழிலாளி மர்மச்சாவு உடல் அழுகிய நிலையில் மீட்பு


UPDATED : அக் 07, 2026 09:29 PM

ADDED : அக் 07, 2026 09:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 09:29 PM ADDED : அக் 07, 2026 09:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, மர்மமாக இறந்து கிடந்த தச்சு தொழிலாளி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்து காளப்பநாயக்கன்பட்டி, கோட்டை நாயக்கன் தெருவை சேர்ந்தவர் சாந்தா, 64; இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். இதில், மகன் பாலசுப்பிரமணியம், 34, தச்சு வேலை செய்து வந்தார். இன்னும் திருமணமாகவில்லை.

தாய் சாந்தா, கடந்த, 3ல் சேலத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். அன்று இரவு, பாலசுப்பிரமணியம் அதிகளவில் மது அருந்தியுள்ளார். தொடர்ந்து வீட்டிற்கு சென்று கதவை தாழிட்டுவிட்டு துாங்க சென்றார். மூன்று நாட்களாகியும் கதவு திறக்கவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, கட்டிலில் பாலசுப்பிரமணியம் அழுகிய நிலையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சேந்தமங்கலம் போலீசார், சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us