ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கு ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு
ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கு ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு
ADDED : நவ 21, 2025 06:06 PM
சென்னை: கலவரத்தை தூண்டியதாக ஆதவ் அர்ஜூனா மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27 ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.இது தொடர்பாக தவெக நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், ' சாலையில் நடந்து சென்றாலே தடியடி... சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால், மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாக கூடி அதிகாரத்துக்கு எதிரான புரட்சியை உருவாக்கி காட்டினார்களோ அதேபோல் இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். இவ்வாறு அந்த பதிவில் கூறியிருந்தார்.இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அந்தப்பதிவை ஆதவ் அர்ஜூனா நீக்கிவிட்டார். ஆதவ் அர்ஜூனா மீது கலவரத்தை தூண்டியதாக சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆதவ் அர்ஜூனா வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த ஐகோர்ட், ஆதவ் அர்ஜூனா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

