கல்லுாரி முதல்வருக்கு டார்ச்சர் மாஜி பதிவாளர் மீது வழக்கு
கல்லுாரி முதல்வருக்கு டார்ச்சர் மாஜி பதிவாளர் மீது வழக்கு
ADDED : செப் 28, 2024 02:19 AM
திருமங்கலம்,:மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் கல்வியியல் கல்லுாரி உள்ளது. இதன் முதல்வராக, 42 வயது பெண் உள்ளார். கல்லுாரி தொடர்பான வேலைகளுக்காக மற்றொரு கல்லுாரி முதல்வருடன் சென்னை சென்ற இவர், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன் என்பவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.
அப்போது அவருக்கு சால்வை அணிவித்த போட்டோவை வைத்து, பதிவாளர் ராமகிருஷ்ணன், இவரிடம் வாட்ஸாப் வழியாக ஆபாசமாக பேசி உள்ளார்.
இது குறித்து, உயர்கல்வித் துறை செயலரிடம் நேரில் புகார் தெரிவித்ததன்படி, ராமகிருஷ்ணன் பதிவாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் தொடர்ந்து பெண் முதல்வருக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து திருமங்கலம் மகளிர் போலீசில் அவர் அளித்த புகாரின் பேரில் ராமகிருஷ்ணன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.