ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கு:போலீசார் தாக்கல் செய்த மனு டிஸ்மிஸ்
ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கு:போலீசார் தாக்கல் செய்த மனு டிஸ்மிஸ்
ADDED : டிச 19, 2024 06:47 PM

சென்னை: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனுவை, சைதாப்பேட்டை கோர்ட் தள்ளுபடி செய்தது.
ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். கோவில்கள் தொடர்பாக, பல்வேறு வழக்குகள் தொடர்ந்து நடத்தி வருபவர். இவர், தன் மீது சமூக வலைதளத்தில் அவதுாறு பரப்புவதாக, ஸ்ரீபெரும்புதுார் ஜீயர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ரங்கராஜன் நரசிம்மனை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவரை, போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி, சைதாப்பேட்டை கோர்ட்டில் சென்னை போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
விசாரித்த நீதிபதி, கஸ்டடி விசாரணைக்கு அனுமதி கோரிய போலீசாரின் மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார். ரங்கராஜன் நரசிம்மனுக்கு ஜாமின் கோரும் மனு மீதான தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.