மகன், மருமகள் மீது வழக்கு: திமுக எம்.எல்.ஏ., விளக்கம்
மகன், மருமகள் மீது வழக்கு: திமுக எம்.எல்.ஏ., விளக்கம்
UPDATED : ஜன 19, 2024 02:53 PM
ADDED : ஜன 19, 2024 01:10 PM
சென்னை: சென்னை பல்லாவரம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் வீட்டில் வேலை செய்த சிறுமியை கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. மகன், மருமகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், கருணாநிதியின் மகன் ஆண்டோ, மருமகள் செர்லினா மீது நீலாங்கரை போலீசார், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தெரியாது
இதனிடையே, எம்எல்ஏ கருணாநிதி கூறியதாவது: என் மகனுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக திருவான்மியூரில் தனியாக வசித்து வருகிறார். அங்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது. இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மருமகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்கள் அதை எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

