உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 07, 2026 11:24 PM

அ நிறம் | அளவு
சென்னை : தமிழகத்தில், 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில் தி.மு.க., சார்பில் துரைமுருகன், அ.தி.மு.க., சார்பில் ராமு உள்ளிட்டோர் போட்டியிட்டனர். துரைமுருகன் வெற்றி பெற்று, அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
அ.தி.மு.க., வேட்பாளர் வி.ராமுவை விட, 746 ஓட்டுகள் அதிகம் பெற்று, அவர் வெற்றி பெற்றார்.
அவரது வெற்றியை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் ராமு, தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி, அமைச்சர் துரைமுருகன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 'துரைமுருகனுக்கு எதிரான தேர்தல் வழக்கு செல்லத்தக்கதல்ல' என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
