உள்ளடக்கத்திற்கு செல்ல
எஸ்.சி., ஆணைய தலைவர் பதவி காலி: மனுக்கள் தேக்கம்
எஸ்.சி., ஆணைய தலைவர் பதவி காலி: மனுக்கள் தேக்கம்
ADDED : ஜூலை 07, 2026 11:24 PM
அ நிறம் | அளவு
சென்னை: கடந்த தி.மு.க., ஆட்சியில், தன்னாட்சி அதிகாரத்துடன், 'தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்' சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்டது.
ஆணையத்தில், ஒரு தலைவர் மற்றும் ஆறு உறுப்பினர்கள் பதவி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி, உறுப்பினராக வக்கீல்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் நியமிக்கப்படுவர். இவர்கள் எஸ்.சி., அல்லது எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர்களாக இருத்தல் அவசியம். ஆணையத்தின் தலைவர் பதவி, கடந்த மார்ச்சில் காலியானது.
அதன்பின், புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனால், புகார்களை விசாரிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 1,000க்கும் அதிகமான மனுக்கள் தேக்கம் அடைந்துள்ளன.
