sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆதிதிராவிடர் குறித்து சர்ச்சை கருத்து கோவை சத்யன் மீது வழக்கு பதிய உத்தரவு

/

ஆதிதிராவிடர் குறித்து சர்ச்சை கருத்து கோவை சத்யன் மீது வழக்கு பதிய உத்தரவு

ஆதிதிராவிடர் குறித்து சர்ச்சை கருத்து கோவை சத்யன் மீது வழக்கு பதிய உத்தரவு

ஆதிதிராவிடர் குறித்து சர்ச்சை கருத்து கோவை சத்யன் மீது வழக்கு பதிய உத்தரவு


ADDED : அக் 31, 2025 01:11 AM

Google News

ADDED : அக் 31, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தொலைக்காட்சி விவாதத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் மீது வழக்கு தொடர உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் செய்வதற்கான முயற்சி எடுத்து வருகிறது.

தண்டிக்கத்தக்க குற்றம் இது குறித்து, தனியார் தொலைக்காட்சி விவாதத்தில், 'வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை மட்டுமே பாதிக்கிறது என்று சொல்வது உண்மையில்லை. அரசு எப்போதெல்லாம் சட்டத்தை கொண்டு வருகிறதோ, அப்போதெல்லாம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள், நாங்கள் ஒதுக்கப்பட்டோம்; பிதுக்கப்பட்டோம்; நசுக்கப்பட்டோம் என்று கூச்சலிடுகின்றனர்' என கோவை சத்யன் பேசியுள்ளார்.

சத்யன் பேசியது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை இழிவுபடுத்தும் வகையில் இருக்கிறது. அவரது பேச்சு, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கத்தக்க குற்றம்.

சட்ட நடவடிக்கை எனவே, தமிழக ஆதிதிராவிடர் ஆணையத் தலைவர் தமிழ்வாணன் தலைமையிலான சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து, கோவை சத்யன் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்கிறது.

அதன்படி, தொடர்புடைய தொலைக்காட்சி அமைந்துள்ள சரகத்தின் காவல் துணை கமிஷனர் மற்றும் உதவி கமிஷனர், வன்கொடுமை சட்டப் பிரிவுகளின் கீழ் கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பான விபரத்தை அறிக்கையாக, நவம்பர் 10ம் தேதிக்குள் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன் உதயநிதியின் சேப்பாக்கம் தொகுதியில் மட்டும், 11.5 சதவீதம் போலி வாக்காளர்கள் உள்ளனர். இதை ஆதாரமாக காண்பித்து, தனியார் தொலைகாட்சி விவாதத்தில் பேசினேன். ஜாதி ரீதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்து விடுவர் என்று பரப்புவது மலிவான அரசியல்; அது தவறு என்று சொன்னேன். அந்த காட்சிகளை வெட்டி ஜாதி சாயம் பூசும் தி.மு.க.,வுக்கும், அதற்கு சாமரம் வீசுபவர்களுக்கும் ஆதாரத்துடன் வீடியோ பதிவு வெளியிட்டு உள்ளேன். தவறு என்று நான் சுட்டிக்காட்டியது யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால், அதற்கு வருந்துகிறேன். - கோவை சத்யன், செய்தி தொடர்பாளர், அ.தி.மு.க.,






      Dinamalar
      Follow us