சுங்க அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த பயணியர் மீது வழக்கு
சுங்க அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த பயணியர் மீது வழக்கு
ADDED : டிச 13, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:இலங்கையில் இருந்து, 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம், கடந்த 8ம் தேதி காலை சென்னை வந்தது. அதில் வந்த பயணியரின் உடைமைகளை சுங்கத்துறை துணை ஆணையர் சரவணன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, இலங்கை பயணியர் நான்கு பேர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்; கொலை மிரட்டலும் விடுத்தனர்.
பின், தங்களை தாக்கியதாக கூறி, அவர்களை பிடித்து, விமான நிலைய காவல் நிலையத்தில் சுங்க அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதன்படி, இலங்கை பயணியர் நால்வர் மீதும், கொலை மிரட்டல் உள்ளிட்ட, ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

