ADDED : நவ 24, 2024 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வன்முறையை துாண்டும் விதத்தில் பேசிய தாக. தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை விமான நிலையத்தில், கடந்த 7ம் தேதி, எச்.ராஜா பேட்டி அளித்தார். அப்போது, 'மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, வி.சி., தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேச விரோதிகள். இருவரையும் அரசு கண்காணிப்பில் வைக்க வேண்டும்' என கூறியிருந்தார்.
இது தொடர்பாக, மனிதநேய மக்கள் கட்சி சார்பில், சென்னை விமான நிலைய போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து, கலவரத்தை துாண்டுதல், வன்முறையை துாண்டுவதற்கு முயற்சித்தல், பொய்யான தகவலை பரப்புதல், இருதரப்பு இடையே பகையை வளர்க்க முயற்சித்தல் ஆகிய நான்கு பிரிவுகளில், எச்.ராஜா மீது, சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துஉள்ளனர்.

