தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கடற்கரையோர கட்டுமான அனுமதி தடை கோரி வழக்கு

 கடற்கரையோர கட்டுமான அனுமதி தடை கோரி வழக்கு

 கடற்கரையோர கட்டுமான அனுமதி தடை கோரி வழக்கு


ADDED : மார் 25, 2026 07:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2026 07:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: கடற்கரையோரம் கட்டுமானம் மேற்கொள்ள அனுமதிக்கும் அறிவிப்பிற்கு தடை கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் தங்கச்சிமடம் ஜோசப் தாக்கல் செய்த மனு: சர்வதேச சான்று பெறுவதற்காக, கடற்கரையின் உயர் அலைக்கோடு என வரையறுக்கப்பட்ட பகுதியிலிருந்து 10 மீ.,தொலைவிற்குள் 17 வகையான கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதிக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை 2020 ஜன.9ல் அறிவிப்பு வெளியிட்டது. இதனால் ஆமைகளின் இனப்பெருக்க இடங்கள், கடலோர நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளின்படி மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தவில்லை. தன்னிச்சையாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கடற்கரையில் வணிக ரீதியான கட்டுமானங்களை அனுமதிப்பது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அதுவரை அதை செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஏப்.16 க்கு ஒத்திவைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us