தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'லோக் ஆயுக்தா' சட்டத்தை அமல்படுத்த கோரி வழக்கு

 'லோக் ஆயுக்தா' சட்டத்தை அமல்படுத்த கோரி வழக்கு

 'லோக் ஆயுக்தா' சட்டத்தை அமல்படுத்த கோரி வழக்கு


ADDED : ஜூலை 07, 2026 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 04:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'லோக் ஆயுக்தா' சட்டத்தை தீவிரமாக அமல் படுத்த கோரிய மனுவுக்கு, ஆறு வாரங்களில் பதிலளிக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க, மத்திய அரசு, 'லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா' சட்டத்தை, 2013ம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் அடிப் படையில், தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், 2018ம் ஆண்டு இயற்றப்பட்டு, 2018ம் ஆண்டு நவம்பர் முதல் அமலுக்கு வந்தது.

இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி, தஞ்சாவூரை சேர்ந்த வி.ஜீவகுமார் என்பவர், பொது நல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக மனிவள மேம்பாட்டு துறை, உள்துறை செயலர், பொதுத் துறை செயலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us